What we do
🌿2019 ம் ஆண்டு ஜுலை மாதம் முதல் கரிசக்காட்டுப்பூவே குழு களப்பணியாற்ற தொடங்கினோம்..
🌿மரம் வளர்ப்பு, மியாவாக்கி முறையில் குறுங்காடுகள் அமைத்தல்,
குடியிருப்பு பகுதியில் மழைநீர் சேமிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்..
🌿இரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நாங்கள் உடல் உறுப்பு தானம் செய்துள்ளோம்..
🌿அரசு பள்ளியில் மாணவர்களை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்..
🌿பள்ளி மாணவர்களிடம் மரம் வளர்ப்பு, மழைநீர் சேமிப்பு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த போட்டிகள் நடத்தி பரிசு வழங்குகிறோம்..
🌿தமிழ்நாடு முழுவதும் ஒத்த கருத்துடைய நண்பர்களை ஒருங்கிணைத்து அனைத்து மாவட்டத்திலும் மரங்கள் நடவும், மழைநீர் சேமிப்பு விழிப்புணர்வு இலட்சியமாக கொண்டு எங்கள் பயணத்தை நோக்கி முன்னேறி கொண்டுள்ளோம்.